ஹஜ் - உம்ரா செய்ய வருபவர்கள் கவனத்திற்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) ஹஜ் மற்றும் உம்ரா செய்ய வருவோர் கவனிக்க வேண்டிய சில விசயங்கள்.
ஹஜ்ஜுக்கு வருபவர்கள் - இந்திய அரசின் ஹஜ் கமிட்டி மூலமாக வருவது மிக மிக சிறப்பானது.
ஹஜ் கமிட்டி மூலமாக வருபவர்களுக்கு இந்திய தூதரகம் இங்கு செய்திருக்கும் வசதிகள் அதிகம் அதுப்போல் தனியார் டிராவல்ஸ் குருப் நடத்துபவர்கள் செய்ய இயலாது.
ஹஜ் கமிட்டி மூலமாக வருபவர்கள் தங்களின் பயண விவரங்கள் மற்றும் மக்கா, மதீனா, அரஃபா, மினா ஆகிய இடங்களில் தங்கும் இடம் மற்றும் தொலைப்பேசி எண் போன்ற முழு விவரங்களை http://www.cgijeddah.com/ என்ற இந்திய துனை தூதரக இணையதளத்தில் அறிய முடியும்.
ஹஜ்ஜுக்கு வரும் ஹாஜிகள் கட்டாயம் ஒரு செல்பேசி வைத்திருப்பது நல்லது.
ஹாஜிகள் வெளியே செல்லும் பொழுது (தொழுகைக்கு சென்றாலும்) தங்களின் அடையாள அட்டை மற்றும் கையில் கட்டவதற்காக கொடுக்கப்பட்ட பட்டிகள் மறக்காமல் அனிந்து செல்வது மிக மிக முக்கிய விசயம். காரணம் நம்மவர்களுக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரிவதில்லை. அகையால் வழி தெரியாமல் பாதை மாறி செல்லும் ஹாஜிகள் அருகில் இருக்கும் காவல்துறை / ஹஜ் அமைச்சகத்தின் உதவியாளர்களிடமோ காண்பித்து தான் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட முடியும்.
உம்ரா வருபவர்கள் (கணவன் - மனைவி தம்பதியானாலும்) அவர் - அவர் கடவுச்சீட்டை (பாஸ்ப்போர்ட்) அவர் அவர்கள் தனியே வைத்திருப்பது (குறிப்பாக மதினாவில்) மிக அவசியமானது.
ஹஜ் - உம்ரா வருபவர்கள் உணவு பொருட்கள் கொண்டு வரும் போது "கசகச" - வை தவிர்க்கவும். இங்கு கசகச முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று. கொண்டுவருபவர்கள் தண்டனை ஆளாக்கப்படுவார்கள்.
ஹாஜிகள் மக்கா - மதினாவில் ஹரம்ஷரீஃபில் தொழுகைக்கு செல்லும் பொழுது தங்கள் குழுவினரிடத்தில் தவறினால் சந்தித்துக் கொள்ளும் இடம் என ஒரு அடையாளத்தை கண்டுக் அதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். Example: கேட் நெம்பர்கள் - அல்லது பெரிய ஹோட்டல்கள், நாங்கள் பெரும்பாலும் கேட் நெம்பர் 79 எதிரில் சவூதி ஏர்லைன்ஸ் மற்றும் அல்தாஜஸ் அருகில்தான் சந்தித்துக் கொள்வோம்.
ஹஜ் மற்றும் உம்ரா செய்ய தமிழில் ஒரு கையேடு இங்கே...
http://www.islamkalvi.com/fiqh/haj/haj_umra_ebook.pdf
மேலும் விவரங்கள் தேவைப்படுவர்கள் என்னை தொடர்ப்புக் கொள்ளவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment